மதுரையில் 110 பள்ளி மாணவ மாணவிகள் புத்த பத்மாசனம் 30 நிமிடங்கள் சமநிலையில் இருந்து சாதனை படைத்தனர்
மதுரையில் கலாம் பாரம்பரிய கலை கழகத்தின் சார்பில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு யோகா திருவிழா
யோகா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த யோகா போட்டிக்கு கலாம் பாரம்பரிய கழகத்தின் நிறுவனர் சுந்தர் தலைமையில் பயிற்சியாளர்கள் மணிமேகலை, சோமசுந்தரம். அழகுமுருகன் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நிமலன்நீலமேகம் கலந்து கொண்டார்.இந்த யோக திருவிழாவில் பள்ளி மாணவ மாணவிகள் 110 பேர் கலந்து கொண்டு புத்தபத்மாசன நிலையில் 30 நிமிடங்கள் சமநிலையில் இருந்து சோழன் உலக புத்தகத்தில் இடம் பிடித்தனர் .இந்த யோகா விளையாட்டு போட்டியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்துசோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் விமலன் நீலமேகம் செய்தியாளர்களிடம் கூறியது பள்ளி மாணவ மாணவிகள் 110 பேர் மொத்த பத்மாசன நிலையில் 30 நிமிடங்கள் சமநிலையில் இருந்து சாதனை படைத்தனர். இதனை சோழன் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கப்பட்டது எனக் கூறினார் .