• Fri. Mar 29th, 2024

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவு- முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

Byp Kumar

May 24, 2023

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டுவந்தார்.இதேபோன்று தியாகராஜர் நூற்பாலைகளின் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஆன்மீக பணிகள் மீதான ஆர்வத்தால் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராகவும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்துவந்தார். இவர் தக்காராக இருந்தபோது மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக இந்த ஆண்டு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கருமுத்து கண்ணன் பங்கேற்வில்லை கருமுத்து கண்ணன் மத்திய அரசின் ஜவுளி குழுத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களாகவே உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று அதிகாலை 4.50 மணிக்கு வீட்டில் காலமானார். தமிழக அரசின் சார்பில் கருமுத்து கண்ணனுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.


இந்நிலையில் இவரது உடலானது பொதுமக்களின் அஞ்சலிக்காக மதுரை கோச்சடை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது இந்த நேரத்தில் பிரபலங்கள் ஆன்மிக தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கனிமொழி‌ எம்.பி. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள் . மதுரை அ/மி மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருகோவில் தக்கார் திரு. கருமுத்து தி.கண்ணன் மறைவுயொட்டி அன்னாரது உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் , மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன் மாநகராட்சி ஆணையாளர் சித்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோரும் அன்னாரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *