வருடத்தில் ஒருமுறை மட்டுமே தரிசிக்கக்கூடிய வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி அம்மனின் தரிசனத்தை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர்.
கடந்த 30ம் தேதி உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் என்றாலே பண்டிகைகளால் நிறைந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், வரலட்சுமி விரதம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் அனைத்து ஆலயங்களிலும் உற்சவங்களும் திருவிழாக்களும் தொடர்ங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கிளியை தனது கையில் வைத்திருக்கும் அன்னை மதுரை மீனாட்சி, வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
மீனாட்சி அம்மனுக்கு மட்டுமே தனியாக நடத்தப்படும் இத்திருவிழா, கடந்த 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வழக்கமாகவே, திருவிழா நாட்களில் மீனாட்சி அம்மன் யானை, நந்தி, அன்னம், பூத வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலையிலும் இரவு நேரங்களில் கோவில் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
ஆடி முளைக்கொட்டு விழாவின் 6ம் நாளான நேற்று மீனாட்சியம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் கோவில் விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசிக்ககூடிய கிளி வாகனைத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முத்துக்கீரிடம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி, மாணிக்க மூக்குத்தி, வைர வைடூரிய நகைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை திரளான பக்தர்கள் வணங்கினர்.

- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி […]
- சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற மதுரை மாணவர்கள்..இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து […]
- அதிமுக பிளவை கடந்து ஒன்றிணையும்.. சசிகலா உறுதி..அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் […]
- இபிஎஸ் மேடையில் … அவிழ்ந்து விழுந்த வேட்டியால் பரபரப்பு- வீடியோஎடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்புநேற்று கிருஷ்ணகிரி சென்று […]
- ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் […]
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது […]
- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக […]
- நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் […]
- சமையல் குறிப்புகள்முட்டை 65: தேவையான பொருட்கள்:முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் […]
- ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழை – வீடியோதென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் […]
- அழகு குறிப்புகள்சர்க்கரை ஸ்கிரப்:
- கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோஇந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் […]
- வீட்டில் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுறத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறைநாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் […]
- நேற்று ராஜினாமா… இன்று மீண்டும் முதல்வர்பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஆனால் […]