

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
