மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை 97 வது வார்டு நிலையூர் அருகே உள்ள துர்கா காலனி பகுதியில் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக 25 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பசுகாதார மையம் கட்டுவதற்கு மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து., பூமி பூஜை நடைபெற்ற பிறகு காரில் ஏறி மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல இருந்த மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் காரை அப்பகுதி மக்கள் வழிமறித்தனர்.
தொடர்ந்து., எதற்காக வந்தீர்கள்.? என்ன பூமி பூஜை நடக்கிறது.? இப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காமல் என்ன செய்கிறீர்கள்.? என்று கேள்வி எழுப்பினர்.? இவை அனைத்திற்கும் அதிகாரிகள் மற்றும் மேயர் பதில் அளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டனர்.அவர்களது காரை வழிமறித்த அப்பகுதி பொதுமக்கள்., தேர்தலின் போது எங்களது அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் எதையும் செய்யவில்லை என்றும்., இப்பகுதியில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் உள்ளீர்கள். பதில் சொல்ல வேண்டும் என்று அதிகாரிகளிடம் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் கேள்விக்கு எதற்கும் பதில் அளிக்காமல் மதுரை மேயர் இந்திராணி காரின் உள்ளே அமர்ந்து இருந்தார். முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்களிடம் அரசு அதிகாரிகள் பேசி சமாதானப்படுத்தினர். பின்பு மதுரை மேயர் சென்ற காரை அங்கிருந்து நைசாக அப்புறப்படுத்தினார். இந்த முற்றுகை போராட்டத்தால் அரைமணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
