மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 77 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க படவேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை போக்குவரத்துத்துறை ஒய்வூதியர்களுக்கு உடனே அமல்படுத்த கோரி மற்றும் மாநில அரசை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
மதுரையில் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளூர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பிச்சை ராஜன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் தேவராஜ் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் இதில் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்
மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
