• Sat. Apr 27th, 2024

தும்பை விட்டு வாலைப்பிடிக்கிறார் ஸ்டாலின் -செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

May 27, 2022

தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தற்போது ஸ்டாலின் பிரதமர் மேடையில் கேட்பது மிகப் பெரிய ஸ்டண்ட் என்பது தெரியவருகிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
மதுரை – தேனி பயணிகள் ரயில் சேவையை பாரத பிரதமர் சென்னை நேரு உள் அரங்கிலிருந்து காணொலி காட்சி மூலம் துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;
தமிழ்நாட்டுக்கு பாரத பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை இன்றைக்கு கொடுத்திருக்கிறார். இவைகள் அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சிப் பணிகளை கொண்டு வருகின்ற வகையில் 31 ஆயிரத்து 550 கோடி ரூபாய் பெருமான திட்டங்களை அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்திருக்கிறார்.
மதுரை தேனி மக்களின் கனவு திட்டமான அகல ரயில் பாதையை தொடங்கி வைத்திருக்கிறார். அதற்காக மதுரை தென் மாவட்ட மக்களின் சார்பாக 506 கோடி ரூபாய் பெருமான திட்டமான மதுரை தேனி அகல ரயில் பாதை உருவாக்க காரணமாக இருந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு இந்த நேரத்தில் மக்களின் சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தற்போது ஸ்டாலின் பிரதமர் மேடையில் கேட்பது மிகப் பெரிய ஸ்டண்ட் என்பது தெரியவருகிறது. அதேபோன்று நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கிறார், நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்போது திமுகவின் இணை அமைச்சராக இருந்தவர் தான்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, அனைத்து மாநிலங்களிலும் இயற்றப்பட்டுள்ளன இருந்தபோதிலும் தமிழ் நாட்டிற்கு மட்டும் விதிவிலக்கு கேட்கிறோம் என்பது அரசியலுக்காக முதலமைச்சர் விளம்பரம் தேடுவதற்காக இது குறித்து மேடையில் பேசியுள்ளார் என்பதாக கருதுகிறேன்.
நிதி பங்கீடு பல மாநிலங்களுக்கு தற்போது மட்டும் குறைத்து கொடுப்பதில்லை, கட்டமைப்பு குறைவாக இருக்கும் பீகார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் வரி வருவாய் இல்லாமல் கூட இருந்தாலும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு அந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கமாக மத்திய அரசு செய்து வருகிறது அதனை ஜெயலலிதாவும் எதிர்த்து இருக்கிறார்.
நீட் விலக்கை பேசிய முதல்வர் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை தொடர்ந்து தென் மாவட்ட மக்களை ஏமாற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *