தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டிக்கு மதுரை சேவத்டே பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாப்பாளையத்தில் உள்ள சேவத்டே உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஜோவினாடெஃப்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மே 11 ம் தேதி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடக்கவிருக்கும் 12 வது தேசியஅளவிலான சப்ஜூனியர் ஹாக்கி போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.தேர்ச்சி பெற்றுள்ள மாணவி ஜோவினாடெஃப்னிக்கு பள்ளி முதல்வர் பெனட்ஞானராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் மதுரை மாவட் ஹாக்கி சங்க தலைவர் ஏ.ஜி. கண்ணன், மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களும் மாணவிக்குவாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.