இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று பெண்கள் டி20 சேலன்ஜ் அணிகளை அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் முறையே சூப்பர்நோவாஸ், டிரெயில்பிளேசர்ஸ் மற்றும் வெலோசிட்டியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் மே 23 முதல் 28 வரை நடைபெறவுள்ள மகளிர் டி20 போட்டியில் மூன்று அணிகளும் மோதுகின்றன.
“இந்த இந்திய மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் ஐபிஎல் போட்டிகளை போலவே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து விளையாட உள்ளனர். இந்த ஆண்டு மகளிர் டி20 சேலன்ஜில் மொத்தம் 12 சர்வதேச வீரர்கள் பங்கேற்பார்கள்” என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அகில இந்திய பெண்கள் தேர்வுக் குழு மூன்று அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது, ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.