மதுரை மாநகராட்சியில், பா.ஜ.க.வின் கவுன்சிலராக இருக்கும் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு பாஜக கவுன்சிலரான பூமா அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்ட பாஜக தலைவர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறி இனி பாஜகவில் என்னால் செயலாற்ற முடியாது என்பதால் மாவட்ட துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என்று அண்ணாமலைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். திடீரென பாஜக நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.