
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிக வெற்றிகளை குவித்த, ‘விஜய் மக்கள் இயக்கம்’ தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட இருப்பதாக இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் முதல் முறை கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு 129 இடங்களைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாகவும், நடிகர் விஜயின் புகைப்படத்தையும் இயக்கக் கொடியையும் பிரச்சாரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
