

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், பிரபல பாலிவுட் நடிகையை காதலிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதலிப்பது வழக்கமானதுதான். அந்த வகையில், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், விராட் கோலி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளையே திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான நடிகை ஆதியா ஷெட்டியை காதலிப்பதாக கடந்த 2 ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சமூக வலைதளங்களின் போடும் பதிவுகள் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக, கே.எல்.ராகுலின் பிறந்தநாள் அன்று “என் ஆளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” (Happy Birthday, my person) என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் அவர்களின் காதல் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நீண்ட தொடர் என்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்துக்கு செல்ல பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி, புறப்படுவதற்கு முன்னதாக வீரர்களிடம், தங்களுடன் யார் யார் வரவுள்ளனர் என கேட்கப்படும். அதற்கு கே.எல்.ராகுல், தன்னுடன் ஆதியா ஷெட்டி வருவார் என்றும், அவர் தனது (காதலி) பார்ட்னர் என்றும் பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்களாக 15 கோடி ரூபாய்க்கு டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனை நடந்துள்ளதாக நிர்வாகம் தகவல் – இது கடந்த ஆண்டை விட 36 லட்சம் ரூபாய் விற்பனை சரிவு என்றும் தெரிவித்துள்ளனர்.
