சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.. தற்போது, ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இந்த படத்தை உல்லாசம் பட இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அருளிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ள்ளார்.
அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தி லெஜெண்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மிரட்டலான போஸ்டருடன் ஹாரிஸ் ஜெயராஜ் இசையுடன் மிரட்டலான மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.