மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, மதுரை மாவட்டம்
வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக, சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராம் கிஷோர் தலைமை தாங்கி சட்டப்பணிகள் பற்றி விளக்கி பேசினார். தலைமை ஆசிரியர் சரவணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் வழக்கறிஞர்கள் முத்துமணி, விஜயகுமார், சீனிவாசன், தயாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு சட்டங்கள் பற்றி விளக்கி பேசினர். இதில் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.