• Fri. Jan 17th, 2025

மதுரையில் தொல். திருமாவளவன் பேட்டி…

ByKalamegam Viswanathan

Dec 8, 2024

விடுதலை சிறுத்தைகள் மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிதாக ஒரு கூட்டணியில் இடம் பெற வேண்டிய தேவை இல்லை.

திமுக கூட்டணி கட்டுப்பாடு இல்லாமல் சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க் கட்சிகளுக்கும் உள்ள சதி திட்டமாக இருக்கும்.

அதிமுக, பாஜக அவர்களின் நோக்கம் திமுக தொடர் வெற்றி பெற்றுள்ளதால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விடாமல் இந்த கூட்டணியில் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்தலாம் என சிலர் முயற்சிக்கிறார்கள்.

மம்தா பானர்ஜி ஒரு ஆற்றல் மிக்க தலைவர் அவரை காங்கிரஸ் புரிந்துள்ளது. அவரோடு பல்வேறு போராட்டங்களில் காங்கிரஸ் இணைந்துள்ளது.

அதவ் அர்ஜுனா மீது பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து கட்சியின் பெயரைக் கெடுக்கும் நோக்கோடு செயல்படுவதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை சின்ன உடைப்பு பகுதியில் விமான நிலையத்திற்கு எடுப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடம் கூறியுள்ளனர். இது தொடர்பாக முதல்வரை சந்தித்து நேரில் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.