• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

சென்னைக்கு வரும் எதிர்கட்சித் தலைவர்…

Byமதி

Oct 28, 2021

அதிமுகவில் இரட்டை தலைமை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இபிஎஸ் ஒரு பக்கம், ஓபிஎஸ் ஒரு பக்கம் என தலைமை அந்தரத்தில் உசலாடுகிறது. கட்சி இரு அணிகளாக பிரிந்து கட்சிக்குள் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், நேற்று சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்திலுள்ள, சேலம் புறநகர் மாவட்டம் கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் கோட்ட செயலாளர்கள் ஆகியோருக்கான தீவிர மறைமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு பின், எடப்பாடி பழனிச்சாமியும் முன்னால் அமைச்சர் ஜெயகுமார் நேற்று சேலத்தில் தீவிர ஆலோசனை நடந்துள்ளது. மிக ரகசியமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அனைத்து தற்போது சென்னையை நோக்கி எடப்பாடி அவர்கள் வருகிறது. இனி கட்சியில் பலவேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.