

செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ரூ.1 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நடப்பட்டது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் உள்ள 24 வார்டில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறன்றனர். இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன எரிவாயு தகன மேடை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆணை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இந்த மின்மயானமானது செங்கோட்டை பண்பொழி சாலையில் உள்ள சுடுகாட்டிற்கு அருகே கட்டப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் செங்கோட்டை நகர்மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான ரஹ_ம், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நவீன மின் மயானத்திற்கு அடிக்கல் நட்டு பணியை தொடங்கி வைத்தனர்.
பொறியாளர் கண்ணன் மற்றும் திமுக மாவட்ட பிரநிதி எஸ்சி.கல்யாணி நகர இளைஞரணி அமைப்பாளார் மணிகண்டன், துணை அமைப்பாளர் இசக்கித்துரைபாண்டியன், ஒப்பந்ததாரார் கடையநல்லூர் சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
