தமிழக சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சீர்மிகு சட்டக் கல்லூரி, 14 அரசு கல்லூரிகள் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக் கல்லூரி ஆகியவற்றில் 1,761 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கியது. சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பப் பதிவிற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சட்டப் படிப்பு.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..
