• Mon. Apr 21st, 2025

பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

ByM.JEEVANANTHAM

Apr 4, 2025

மயிலாடுதுறை அருகே மொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீகல்யாணி ஈஸ்வரி அம்பிகா, சமேத ஸ்ரீ கல்யாண பரமேஸ்வரர் மற்றும் மார்க்க சகாய விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மொழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மார்க்க சகாய விநாயகர் ஆலயம், ஸ்ரீ கல்யாண் ஈஸ்வரி அம்பிகா, சமேத ஸ்ரீ கல்யாண பரமேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் ஆகியவை அமைந்துள்ளனர். ஆலயம் பழமை காரணமாக பழுதடைந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் முயற்சியில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இந்து அறநிலையை ஆட்சித்துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலைகள் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயங்களில் கோபுரங்கள் மற்றும் மூலவர் சிலைகளுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.