
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற சிவாலய ஓட்டம் முஞ்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கியது. தமிழக மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். குமரி மாவட்டத்திற்கு நாளை(பெப்ரவரி_26) உள்ளூர் விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை 110 கிலோமீட்டர் கால்நடையாக சென்று ஓடி கோவிந்தா கோபாலா என கோஷமிட்டவாறு வழிபடுவது சிவாலய ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது .

இந்த சிவாலய ஓட்டம் இந்தியாவில் இங்கு மட்டுமே நடைபெறுகின்றது சிறப்பாகும். இந்த சிவாலய ஓட்டத்திற்காக மறு பக்தர்கள் மூன்று நாட்கள் தீ படாத உணவை உண்டு விரதம் இருந்து இந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
சிவபெருமானை நோக்கி பக்தர் ஒருவர் கடும் தவமிருந்து தான் விரல் சூடுபவர் அழிந்து போக வேண்டும் என்கின்ற வரத்தை சிவனிடமிருந்து பெற்றார். சிவனிடம் இருந்து வரத்தைப் பெற்ற அந்த நபர் சிவபெருமானையே தன்னுடைய சுண்டு விரலால் சுண்டி வரம் தந்த சிவபெருமானையே அழிக்க முற்படுவார். அப்பொழுது சிவபெருமான் சுண்டோதரனிடம் இருந்து தப்பி ஓடுவதற்காக திருமாலை கோவிந்தா, கோபாலா உதவி கேட்டு அபய குரல் எழுப்பிய படி, பல்வேறு இடங்களில் ஓடி ஒளிவார். அவர் ஓடி ஒளிந்த இடங்களே தற்பொழுது குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் ஆக கருதப்படுகிறது. அபயம் கேட்டு சிவபெருமான் திருமாலை அழைத்ததால் திருமால் மோகினி வேடமடைந்து சுண்டோதரன் முன்பு நடனம் ஆடி சுண்டோதரனையே அவன் கை விரலையே அவன்தலை மீது தூண்டச் செய்து சுண்டோதரனை அழிப்பார்.

அப்பொழுது வைணவத்திற்கும், சமணத்திற்கும் இருந்த வேறுபாடக கருதப்பட்ட நிலையில் சிவனை, திருமால் காப்பாற்றியதால் அரியும் சிவனும் ஒன்று என்கின்ற ஐதீகத்தினனை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே இந்த சிவாலய ஓட்டம் நடப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடம் சிவாலய ஓட்டத்தை ஒட்டி இரவு நேரத்தில் செல்பவர்களுக்கு பைகளில் மின்னொளி எதிரொலிக்கும் ஸ்டிக்கர்களை காவல்துறையினர் ஒட்டியதையும் அரசு தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பக்தர்கள் பாராட்டினார்கள்.

