
கன்னியாகுமரியில் தக்கலை கல்வி மாவட்டம் சரகத்திற்கு உட்பட்ட 70_ பள்ளிகள் சார்பில் சாரணியர் இயக்கத்தின் 75_வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்திய சுதந்திரத்தின் 77_வது ஆண்டு விழாவின் அடையாள கொண்டாட்டங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களில் கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் ராணுவம், வான்படை, கடல் படை என்ற பாதுகாப்பு படைகள் இருப்பது போன்று, இந்திய மாணவர்கள் அனைவருக்கும் மூன்று படைகளிலும் கட்டாயம் சேருவது என்ற சட்டம் இந்தியாவில் இல்லை. (நமது அண்டை நாடான சிங்கப்பூரில் பள்ளி படிப்பை முடித்ததும், ராணுவத்தில் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் சேர்த்து பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளது.)

இந்தியாவில் பள்ளி படிப்பிற்கு பின், கட்டாயம் ராணுவ பயிற்சி என்பது இல்லை என்றாலும். ராணுவ பயிற்சியை ஒத்த ஒரு பயிற்சி மாணவ பருவத்தில் பழகுவது என்பதின் அடிப்படையில் “சாரண சாரணியர்” பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.
தக்கலை கல்வி மாவட்டம் சரகத்திற்கு உட்பட்ட 70_ பள்ளிகளில் இருந்து 1500_க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சாரண, சாரணியர் இயக்கத்தின் 75_ ஆண்டை அடையாளம் படுத்தும் வகையில், தக்கலை கல்வி மாவட்டம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் மூன்று நாட்கள் முகாம் இன்று தொடங்கியது.

கன்னியாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் குத்துவிளக்கை ஏற்றி மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் பேசிய துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் சாரணர் சாரணியர் மத்தியில் உரையாற்றிய போது, மாணவ பருவம் தான் வாழ்க்கை பயணத்தில் முக்கியமான பொற்காலம். எதிர் காலத்தில் என்னவாக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் தாங்கி அந்த இலக்கு நோக்கிய பயணத்திற்கான காலம் என தெரிவித்தார்.

இன்றைய இளைய சமுகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாக கூடாது என்ற விழிப்புணர்வு ஊர்வலம் விவேகானந்தா கேந்திர முதல், தேசத்தந்தை காந்தி அடிகளின் நினைவு மண்டபம் வரை நடைபெற்றது.
கன்னியாகுமரியில் நடைபெறும் 3_நாள் முகாமில் பல்வேறு பயிற்சிகள் சாரணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருப்பதை முகாம் பொறுப்பாளர் தெரிவித்தார்.

