• Mon. Apr 21st, 2025

ரூ.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிரபா ராமகிருஷ்ணன்…

குமரி மாவட்டத்தில் உள்ள 490_திருக்கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிதி ரூ.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் இருந்து பிரபா ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களான, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில், நாகர்கோவில் நாகராஜா கோயில், தக்கலை குமார கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், என்ற கோவில்களை கடந்து குமரி மாவட்டத்தில் உள்ள 490_கோவில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசின் மானியம் ரூ.13_கோடிக்கான காசோலையை சுசீந்திரம்_ கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் இருந்து இன்று நடந்த (பெப்ரவரி_27)ம் நாள் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.