


அகவை 40_கடந்தவர்கள் பங்கேற்ற கால்பந்தாட்டப் போட்டியை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்.ஜி.ஓ காலனி அருகே வெள்ளாறன்விளை பகுதியில் “கவின் டர் ஃப்” என்ற கிளப் சார்பில் மாநில அளவிலான 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு அணிகள் மற்றும் கேரள மாநிலம் மலப்புரம், திருவனந்தபுரம் மாவட்ட அணிகள் பங்கேற்றன. இந்த கால்பந்தாட்ட போட்டியினை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.


போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் தர்மயுகா அறக்கட்டளை தலைவர் கவிதா, கோபாலகிருஷ்ணன், ஆண்டனி சேவியர், பாபு மணிகண்டன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


