• Fri. Mar 29th, 2024

பக்தர்கள் இன்றி பக்தியுடன் வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு

வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது.

வார இறுதி நாளான இன்று கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் அனுமதியின்றி குடமுழுக்கு நடைபெற்று வருகிறது.காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது.

பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை வடபழனி முருகன் கோயில் (Lord Muruga) உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு நடைபெறும் கும்பாபிஷேகத்தை நேரில் காண்பதற்காக பலரும் ஆவலாக இருந்தனர்.இதற்கு முன்னதாக, கடந்த 2007ஆம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது ஆலயம் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

கங்கை, யமுனை என பல புனித நதிகளில் இருந்தும் தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ராமேஸ்வரம், அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டன.கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கிவிட்டது.

எனவே, இன்று கலந்துக் கொள்ள முடியாத பக்தர்கள், வியாழனன்றே கோவிலுக்கு அதிக அளவில் வந்து கடவுளை தரிசித்தனர்.பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் கட்டப்பட்ட இந்தக் கோயில் மிகவும் பிரசித்து பெற்ற ஆலயம் ஆகும். கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவராக இருக்கும் முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் என பல சன்னதிகள் இந்தக் கோவிலில் உள்ளது.

இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.இந்த ஆலயத்தில் முருகன், காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்றும் ஒரு தனிச் சன்னதி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *