டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் எஸ்எச்.6 பிரிவில் ஹாங்காங் வீரர் மன் காய் சூவை எதிர்கொண்ட இந்தியா வீரர் கிருஷ்ணா நாகர் 2-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இதன்முலம் டோக்கியோ பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இந்தியாவுக்கு 5வது தங்கம் பதக்கம் வென்று கொடுத்த 22 வயதான கிருஷ்ணா நாகருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2012ல் லண்டனில் 1 பதக்கம், 2016ஆம் ஆண்டு ரியோவில் 4 பதக்கம் வென்ற இந்தியா, தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பதக்க பட்டியலில் இந்தியா 24வது இடத்தில் உள்ளது.
5வது தங்கத்தை தட்டி தூக்கிய தங்கம் கிருஷ்ணா –வரலாற்றில் இடம் பிடித்த இந்தியா
