கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த முஜீப்-சலாமத் தம்பதியின் மகள் சமீகா பர்வின் தனது சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் செவிதிறனை இழந்துள்ளார். இந்நிலையில் விடாமுயற்சியால் தடகளபோட்டியில் பயிற்சி பெற்று சமீகா, தேசிய அளவில் காதுகேளாதோருக்கான தடகளபோட்டியில் நீளம் தாண்டுதலில் பங்கேற்று மூன்று முறை தங்கபதக்கங்களை வென்றுள்ளார்.
சர்வதேச அளவில் போலந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் அழைத்து செல்லவதற்கு இந்திய விளையாட்டு ஆணையம் முன்வராத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற துணையுடன் போலாந்து நாட்டில் விளையாட சென்றார்.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி போலாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகளபோட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் பங்கேற்ற சமீகா பர்வின் 4.94 மீட்டர் தாண்டி 7வது இடத்தை பிடித்து, அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்க உள்ள காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிக்கு ( deaf olympic)தகுதிபெற்றுள்ளார். அதை தொடர்ந்து சொந்த ஊரான கடையாலுமூட்டிற்கு வந்த மாணவி சமீகா பர்வீனை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலைகள் அணிவித்தும் வரவேற்றனர்.