• Tue. Feb 18th, 2025

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று 12.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு

ByP.Kavitha Kumar

Jan 20, 2025

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இன்று பிற்பகல் 12,30 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது,

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரது உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்களை ஜன.20-ம் தேதி பகல் 12.30 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. சஞ்சய் ராய்க்கு உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.