சென்னையில் உள்ள மத்திய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று இளையராஜாவுக்கு ஒரு சம்மன் சென்றிருக்கிறது.அதில், சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்பு சட்டத்தின்படி, விசாரணைக்காக 2022 மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை உடன் எடுத்து வரும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையில் இருந்து மார்ச் 21-ம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே காரணங்களை மீண்டும் குறிப்பிட்டு மார்ச் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குனர் சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
தற்போது வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டதாக ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் 3 சம்மன்களுக்கும் இளையராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் அவருக்கு இறுதி நோட்டீஸை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இளையராஜா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வரியோடு சேர்த்து கட்டணத்தை பெற்றுள்ளார். ஆனால் அந்த வரியை அவர் ஜிஎஸ்டி ஆணையத்திடம் அவர் செலுத்தவில்லை என்று என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2013 – 2014 நிதியாண்டில் வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை என இளையராஜா பதிவு செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகளுடன் பேசி உரிய வரியை செலுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வரலாம். அப்படி இல்லையென்றால் உயர் நீதிமன்றத்தை அணுகி- நோட்டீஸ்க்கு எதிராக வழக்கு தொடரலாம்.