

மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதும் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்க உள்ள ரோபோடிக் சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.மழலையர் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலில் உள்ளது” என்றார்.
