• Fri. Oct 4th, 2024

தங்க கடத்தலில் கேரளா முதல்வருக்கு தொடர்ப்பு…

Byகாயத்ரி

Jun 8, 2022

தங்க கடத்தில் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த சட்டமன்றதேர்தலுக்கு முன் தங்க கடத்தல் வழக்கு பரபரபப்பாக பேசப்பட்டது. தற்போது மீண்டும் வழக்கு சூடு பிடித்துள்ளது எனலாம்.
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு தூதரக முன்னாள் ஊழியர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கும் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *