• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

குஜராத் சட்டசபை தேர்தல் கெஜ்ரிவால் இன்று தீவிர பிரசாரம்

ByA.Tamilselvan

Jul 26, 2022

குஜராத் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள நிலையில் கேஜ்ரிவால் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை குஜராத் சென்றடைந்தார். ராஜ்கோட் நகரில் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கடந்த ஜூலை 3-ம் தேதி அன்று அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய இடங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபைத் தொகுதிகளில் சுமார் 50 இடங்களைக் கொண்ட சௌராஷ்டிரா தொகுதியில் கெஜ்ரிவால் கவனம் செலுத்துகிறார்.