• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அண்ணா திமுகவுக்கு எதிர்காலம் இருக்கா ?இல்லையா? என நீங்க கவலைப்பட வேண்டாம்..,

ByKalamegam Viswanathan

Oct 18, 2026

தமிழகத்தில் நடைபெற்று வருகிற தவெக ஆட்சி பொறுப்பேற்று, சில நாட்களில் மாநிலம் முழுவதும் நீடித்த மின்தடை என்பது ஒரு பெரும் கவலையை மக்களுக்கு ஏற்படுத்தியது. மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கு மின்தடை தான் மாற்றம் என்ற கவலையை அளித்தது.

கடந்த கால அரசின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்தார்கள். மேலும், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்யப்பட்டிருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு ஓரிரு வாரங்களிலே தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் துரித நிலையில் எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆறுதலாக செய்தி வெளியிட்டார். ஆனால் என்ன நடந்தது?

5 மாதங்கள் ஆகியும் தமிழகத்தில் மின்வெட்டு என்பது குறைந்தபாடு இல்லை. ஆனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இல்லை. பல்வேறு பகுதிகளில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட மின்வெட்டு தப்புவதில்லை. ஆனால் அமைச்சர்களும் ,அதிகாரிகளும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இதை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்கள் மனது தயாராக இல்லை.

எல்லோரும்”மின் தடை இருக்குது, சொன்னார்கள் ஆனால் அமைச்சர் வந்து முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிற மாதிரி, இல்லை என்று சொன்னார். ஆனால் இப்போது மின் தடையை சமாளிக்க முடியாமல் தவெகஅரசு விழிபிதுங்கி தடுமாறிக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

மின் தேவையை முன்கூட்டியே கணிக்கத் தவறியதா தவெக அரசு? அதேபோல டெண்டரில் வெளிப்படை தன்மையை இப்போது கடைபிடிக்கிறதா தவெக அரசு?

இந்த நிலையில் தான் தமிழகத்திலும் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால், மழைக்கால மின் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் இடமிருந்து 4500 மெகாவாட் மின்சாரம் இதுவரை வரலாறு காணாத வகையிலே யூனிட் ஒன்று 35 என்ற விலையிலே வாங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர்அறிவிப்பு வெளியிட்டு இருப்பது தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியாகத்தான் இது இருக்கிறது.

கடந்த காலங்களில் அம்மாவின் அரசில் மின் பற்றாக்குறை இருந்த காலங்களில் 4.55 பைசாவிற்கு வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அதிகபட்சமாக 6.55 பைசாவிற்கு வழங்கப்பட்டது

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வாங்கப்பட்டது. இது மிக அதிகமான தொகை என்று மின்சாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்றபோது ஒப்பாரி வைத்தார்கள். ஆனால் தற்போது என்ன நடக்கிறது? 15 ரூபாய் 20 ரூபாய்அதிகம் என்று சொன்னவர், இப்போது கூடுதலாக 15 ரூபாய் அதிகம் கொடுத்து 35 ரூபாய் ஒரு யூனிட் மின்சாரம் என்று வாங்குவது ஒருவேளை மெகா ஊழலுக்கான கதவுகளை தவெக அரசில் திறந்து வைக்கப்பட்டுள்ளதா ?என்கிற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு இடையில் மாலை நேர தேவைக்காக தனியார் இடமிருந்து மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் 37 ரூபாய்க்கு வாங்க தவெக அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடிகளில் இழப்பு ஏற்படும் இதனால் மக்கள் தலையில் தான் மேலும் வரிச்சுமை ஏறிவிடும். என்பதை தவெக அரசு ஏற்றுக்கொள்வதற்ககு தயாராக இல்லை.

எடப்பாடியார் உட்பட அனைத்து கட்சித் தலைவர்களும் இதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டு விட்டார்கள். ஆனால் இந்த நிமிடம் வரை, தமிழ்நாட்டு மக்களே, நீங்கள் நம்பிக்கையோடு மாற்றத்தை வேண்டி தேர்ந்தெடுத்த முதல்வர் வாய் திறக்கவில்லை. இது குறித்து எந்த விளக்கமும் அறிக்கை கொடுக்கவில்லை.

நீங்கள் ஒரு கட்சித் தலைவராக இருந்தால் விருப்பப்பட்டா சொல்லலாம், ஆனால் நீங்க தமிழ்நாட்டின் முதலமைச்சர், இதுவரை வரலாறு காணாத வகையில் 35 ரூபாய்க்கு வாங்கினதால் மக்கள் கொதிச்சு போயிருக்காங்க.

இப்போது மாலை நேரத்துக்காக கூடுதலாக இன்னும் 37 ரூபாய் கொடுத்து வாங்குவோம்னு செய்தி வெளியாகுது. இது குறித்து முதல்வர் விளக்கம் சொல்லணுமா, வேணாமா?

தமிழ்நாடு கடனில் இருக்கிறது. மின்சார வாரியம் கடனில் இருக்கிறது இதெல்லாம் குற்றம் சொல்லி தான் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு கேட்டார் இதில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினாரா? இதற்கு நிரந்தர தீர்வு சொந்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

2011 இல் ஆட்சி பொறுப்பு ஏற்று அம்மா தமிழகத்தை மின்மிகு மாநிலமாக உருவாக்கினார்கள குறிப்பாக அதிமுக ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகளாக மின் கட்டணத்தை உயர்த்த வில்லை

அமைச்சர் நிர்மல் குமார் அதிர்ஷ்டத்தில அமைச்சரானவர். அதனால அந்த வரலாறு தெரியறதுக்கு வாய்ப்பில்லை.

இவர் என்னைக்கு அமைச்சரா பொறுப்பேற்று மதுரைக்கு வந்தாரோ, அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அண்ணா திமுகவுக்கு எதிர்காலம் இல்லை. எடப்பாடியாருக்கு எதிர்காலம் இல்லை. அப்படின்னு பேசுவதற்கு இவருக்கு 24 மணி நேரம் போதவில்லை .

எடப்பாடியாருக்கு, அண்ணா திமுகவுக்கு,அதிமுக தொண்டர்களுக்கு எதிர்காலம் இருக்கா ?இல்லையா? என நீங்க கவலைப்பட வேண்டாம். இப்படியே நீங்க பேசிக்கிட்டே போனீங்கன்னா, உங்களுக்கு எதிர்காலம் இருக்கா? தவெகவிற்கு எதிர்காலம் இருக்கா? விஜய்க்கு எதிர்காலம் இருக்கான்னு மக்கள் கேள்வி கேட்பார்கள்.

அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே, இதுபோன்று நீங்கள் பேசிக்கொண்டு காலத்தையும், நேரத்தையும், மக்கள் கொடுத்த அதிகாரத்தையும் வீணடித்தால் எடுத்தால் உங்களுக்கும், தவெகவிற்கும் எதிர்காலம் இருக்காது

திமுக அரசு போறதிற்கு இந்த மின்தடை தான் காரணமாக இருக்கும் என ஆற்காடு வீராசாமி மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் பொழுது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.இந்த வரலாறு நநிர்மல் குமாருக்கு தெரியுமோ, தெரியாதோ, அவர் பாவம் சின்ன பிள்ளை. இப்பதான் அதிர்ஷ்டத்துல அமைச்சர் ஆயிருக்காரு.

ஆகவே அடுத்தவங்க எதிர்காலத்தை ஜாதகத்தை கணிப்பதை விட்டுட்டு,
தவெகக்கு விஜய்க்கு எதிர்காலம் இருக்கா, உங்களுக்கு எதிர்காலம் இருக்கா என்று மக்கள் கேட்கிற கேள்வி நீங்கள் அதற்கு பதில் சொல்லணும்.

மின் தேவையை கணக்கிட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஈடுபடுவதை விட்டுவிட்டு, இப்படி அவதூறுகளை அள்ளித் தெளித்து அதிமுகழை அழிந்து போச்சுன்னு சொல்றதை முதல்ல நிறுத்துங்க. ஏன்னா அடுத்தவங்களை அழிஞ்சு போச்சு, அழிஞ்சு போச்சுன்னு சொன்னா, நீங்க அழிஞ்சு போயிருவீங்க என கூறினார்