• Sun. Feb 9th, 2025

அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

ByKalamegam Viswanathan

Jan 30, 2025

சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால், வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகள் சுற்றி திறிந்து வருகின்றன. சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் உயிர் பலி எண்ணிக்கை தொடர்ந்த வண்ணமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கால் நடைகளால் அதிகமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

கால்நடைகளால் வாகன ஓட்டிகள் சாலை விபத்துகுள்ளாகி கை. கால் முறிந்து படுகாயம் அடைந்தும் பலரும் உயிரிழந்தும் உள்ளனர் . மேலும் கால் நடைகளின் உரிமையாளர்கள் அவர்களது சொந்த இடங்களில் வைத்து முறையாக கால் நடைகளை பராமரிக்காமல் சாலைகளில் விடுவதுனால் தான் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகி படுகாயங்கள் மற்றும் உயிரிழந்து வருகின்றனர் . மேலும் ஊராட்சி , பேரூராட்சி , நகராட்சி – அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மேத்தன போக்காக இருப்பதின் காரணமாகவே தொடர்ந்து இது போன்ற சாலை விபத்துகளில் வாகன ஒட்டிகள் சிக்கி வருகின்றனர்.

எனவே. குறிப்பாக இ சி ஆர் போன்ற சாலைகளில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகி படுகாயங்கள் – உயிரிழப்பு போன்று ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் சம்பந்த பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியாக அபதாரமும் மற்றும் வழக்கும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.