சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை காரில் துரத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தெர்டர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பெண்கள் அளித்த புகாரின் பேரில் , காரில் துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து
சிசிடிவி கேமராக்களை தாம்பரம் மாநகர காவல்துறை குற்றவாளிகளைத் தேடி வந்தது. இந்த நிலையில் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மே லும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்துரு என்ற கல்லூரிமாணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் விடிய விடிய போலீசார் நடத்திய தீவிர சோதனையில் மேலும் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்துரு உள்ளிட்ட 7 பேர் பெண்களை காரில் துரத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.