ஓர் மகிழ்வு ஆரவாரத்தின் வழிகாட்டி நீ தானே
நீயிலாத போது பௌர்ணமி இரவு கூட அமாவாசையாய் நகர்கிறது எனக்கு
குளிருட்டும் காற்று கூட எரிச்சலூட்டும் வெப்பத்தை உமிழ்வது போல் ஓர் தோன்றல் மனத்தினில்
ஆம் நீ தானே என் ஹார்மோன்களில் மகிழ்கீதம் மீட்டும் ஹார்மோனிய ஸ்வரங்கள்
மெஸ்மரிசம் செய்யவைக்கும் உன் மென்ஸ்பரிசமே எனக்கு பரவசத்தை தூண்டும்
பொழுதாய் அமையும்
இல்லையேல் பழுதாய் அமையும் என் அனுதினமும்
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்