• Fri. Jan 17th, 2025

கவிதை:பேரழகனே!

பேரழகனே..,

எத்தனை வருஷங்கள் ஆனாலும் மழை மழையாகவே இருக்கிறது
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன் மீதான என் காதல்..,
இந்த மழையைப் போலவே காயாமல்
என்னுள் ஈரப்பதமாகவே இருக்கிறது
..!
நீ எங்கிருக்கிறாய் தெரியவில்லை
தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை..,
எப்போதெல்லாம் மழை வருகிறதோ
அப்போதெல்லாம் என்னுடனே
நனைய வந்துவிடுகிறாய் மழையைப் போலவே
.., என் பேரழகனே!

கவிஞர் மேகலைமணியன்