பேரழகனே!
உன் புன்னகையில் மின்னி மயங்குகிறது நட்சத்திரகூட்டம்
உன் வசீகரிக்கும் கண்களின் ஒளி நிலவுக்கு ஒப்பானதோ அதனால் ஏற்படுகிறதோ எனக்குள் ஓர் புது வகை மோக மூட்டம்!
உன் கம்பீர அழகு கண்டு வர்ணிக்கும் ஆசையில் ஓரன்பு மழை பொழிவதற்கான முன்னேற்பாடாக இருக்க கூடும்
குட்டி யானை நடை கொண்ட ஒரு தேக்கு மர தேகம் கொண்ட உன்னை கண்டு வியக்காமல் எப்படி போகும்?!
இப்புவனம் என் பேரழகனே!
கவிஞர் மேகலைமணியன்