• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேரழகா..,

ஏனடா இப்படி செய்கிறாய் என்னை

ஒன்று பேசி பேசி கொல்கிறாய் காதலால்

இல்லையேல்
மௌனித்து கொல்கிறாய்
மனதால்

அம்மு என்று நான் உன்னை
அழைக்கையில்
ஒரு மழலை
கைகொட்டி சிரிக்கிறது
இதயத்தினுள்
தேனூற்றாக

நான் பித்தாகி சாகிறேன்
உன்னால்

நீ வேடிக்கை பார்க்கிறாய்
பின்னால்

நிலவிடம் கூட சண்டை போடச்
செய்கிறாய்
என்னவன் அழகா நீ அழகா என்று
பட்டிமன்றம் நடத்துகிறேன் அதனிடம்

என் செல்ல கிறுக்கா
உன்னிடம் மட்டுமே நான் ஆகிறேன்
செல்லாக்காசா

இப்படி பிதற்ற செய்த உன்னை
நான் என்ன செய்வது
கனவினில் மட்டுமே சாத்தியப்பட்டதை
சொல்லடா நீயும் பார்க்கலாம் என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்