

பேரழகனே..,
இளையவனே
உன்னை என் இமைகள் காணவில்லை
இருந்தும் உன்னைக் காண
என் இதயம் துடிக்கிறது
இதற்கு பெயர் தான் நேசமா??
பேரழகனே
நண்பனாக இருந்த காவலனே
உன்னை காதலாய் மாற்றிய
நினைவுகளை நினைக்கையில்
கண்ணீர் துளிகள் என்னை
முத்தமிடுகின்றன
ஊமையாய் பேசிய வார்த்தைகள் யாவும்
என் உதிரத்தில் கலந்ததால்
உயிரியல் மாற்றம் கண்டு உறுதி செய்கிறது
உன் மீதான என் காதல்
அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும்
அன்பே உன் அரைநொடி வாய்மொழி
அமுதம் கேட்டால் போதும் என் ஆயுள் அதிகரிக்கும்
உன் மௌனம் அழகானது தான்
இளையேன் என் உணர்வுகள் புரிந்தும்
புரியாதது போல நடிப்பது இன்னும்
என் துடிப்பை அதிகமாக்குகிறது
இருந்தும் நீ எனக்கில்லை என்றாலும்
உனக்காகவே வாழ்வேன்
உன் நினைவாக
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்

