

பேரழகனே..,
உருகிடாத உயிரோவியமே
என்னையும் உறைய வைத்ததடா உன் கண்கள்
சிந்திடும்
மந்திர புன்சிரிப்பு..,
ஆயிரம் வார்த்தைகள்
மொழிந்திடும் என்
இதழ்களுக்கு
புரியவில்லை
உன் கண்கள் பேசிடும்
ஒற்றை மொழிக்கு
அர்த்தம் என்னவென்று..,
உன் மௌனம் என் இதயத்தை சுனாமியாக
சுழற்றினாலும்
உன் மந்தமாக புன்னகை
என்னை உன் வசம் இழுத்து சிறை பிடிக்கவே செய்கிறது..,
உன் கண்களை ரசித்து
நான் எழுதிய கவிதைகளுக்கு ஒரு நூலகமே அமைத்தாலும் தகும்..,
என்னில் அழகு நீயடா
என் பேரழகனே!

கவிஞர் மேகலைமணியன்

