• Sat. Mar 22nd, 2025

பேரழகா..,

வார்த்தைகள்
வசப்படாத போது
உன்னிடம்
யாசிப்பதுண்டு,
கண்ணசைவில்
வந்து விழுந்திடும்
வார்த்தைகள்… கவிதைகளாகவே.

உன் மௌனத்தில்
கவிதை தருகிறாய்…
பேரழகா உன்
இசைவைச் சொல்லி
அந்த நேசத்தையும் தந்தாலென்ன..?
காலமெல்லாம்
எழுத வேண்டும்…

நேசக்
கவிதைகள் என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்