• Fri. May 10th, 2024

கனிம வளங்கள் கொள்ளை – பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு

ByJeisriRam

Apr 27, 2024

தேனி மாவட்டம், போடி தாலுகா, சூழப்புரம் கிராமத்தில் தினதோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் இரவு, பகலாக விவசாய நிலங்களில் முறைகேடாக கொள்ளை அடிக்கப்பட்டு வருவதால் கிராம சாலைகள் முழுவதும் சேதமடைந்து வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு தெரிவித்து வருக்கின்றனர்.

தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், சூழப்புரம் கிராமத்தில் 18 ஆம் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் அமைந்துள்ள பகுதியில் முழுவதும் மணல் பாங்காக விவசாயம் நிலங்கள் அமைந்துள்ளது.

இந்த நிலங்களில் முறைகேடாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள், மணல், செம்மண் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. கனிம வள கொள்ளைகளால் கிராம சாலைகள் முழுவதும் முற்றிலும் சேதம் அடைந்து வருகிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்,

எனவே சுமத்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *