• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பொறியல் கல்லூரி மாணவர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரை கருத்தரங்கம்

ByJeisriRam

Apr 27, 2024

பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியல் கல்லூரி மாணவர்கள் 920 பேர் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரை கருத்தரங்கம், ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில் நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரி தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

எத்தியோப்பியா பல்கலைக்கழக முனைவர் அடிசு நேகாஸ் அலி மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முனைவர் ஹரிஹரன் கருத்துரை வழங்கினார்கள்.

வெளிநாடுகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து இயந்திரவியல், கணினியியல், கட்டிடவியல், மின் அணுவியல் தொடர்புத்துறை , மின்னியல் கணினி துறை உள்ளிட்ட 920 மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை முனைவர்களிடம் சமர்ப்பித்தனர்.

பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் குழுவினரால் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கல்லூரி முதல்வர் அருள்குமார் பரிசுகளை வழங்கினார்.

மேலும் படைப்பைகளை அளித்து பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.