• Fri. Jan 17th, 2025

நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படும் சின்னச் சுருளி அருவி… ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்

ByJeisriRam

Apr 27, 2024

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, கோம்பை தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னச் சுருளி அருவி உள்ளது. 50 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து விடும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் சின்னச்சுருளி அருவி, வறண்டு தற்போது பாறைகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சின்ன சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தற்போது பள்ளி கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதிகமான சுற்றுலா பயணிகள் சின்ன சுருளி அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சின்ன சுருளி அருவி முழுவதுமாக வறண்டு உள்ளதால் அருவியின் மூலம் பயன்பெறும் சுமார் 20 கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.