பேரழகா..,
இதயம் சுமந்திடும்
சொற்கள் யாவும்
கசிந்து விடக் கூடாது என
நினைக்கும் போதே
அங்கே இரு விழிகள்
பூத்திடும் கண்ணீர் பூக்கள்
காண்பித்தே விடுகிறது
எட்டப்பனாகியே
சோகம் எப்பவும் சுகம்தான்
சுகித்திடும் நினைவுகளின்
பாரம் இசையின் முன்னே
இமை மூடும்போது என் பேரழகா
கவிஞர் மேகலைமணியன்