பேரழகனே..,
மனதாலும் இசையாலும்
ஒன்று சேர்கின்ற நேசமானது
உறுதியாகிறது
ஒவ்வொரு தடவையும்
ஒலிக்கின்ற கானங்களோடு
ம(ப)றந்து போகின்ற
இதயமிங்கே அதன்
சாட்சியாகின்றது
சொல்லிட முடியாத சோகமும்
சுகமாகிடுமே நின். நியாபகங்களை
அசை போடும் கணம்தனிலே. இசையாலே இதயங்கவர்ந்த கள்வனே
என் பேரழகனே
கவிஞர் மேகலைமணியன்