• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

நானும் உன் நினைவுகளின்
எண்ணங்களை
கொஞ்சம் மறந்திடலாமென
மனதோடு உரையாடியே
ஒப்பந்தமிட்டாலும்

மறுபடியும் தோற்றே …தான்
போகிறேன்..
மறுநொடியே
ஏவி விட்டது போலவே..
காற்றோடு தேடிவந்து..
விழுகின்றது…
இந்தப் பாடல் …

பற்றிக்
கொண்டது மீண்டும்

இதோ
உன் எண்ண அலைகள்
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்