பேரழகனே..,
உடல் மட்டுமே என்னோடு
தேடும் உயிர் செல்லும்
என்றும் உனது பின்னோடு
காணாத ஏக்கமெல்லாம்
கண்ணீரில்
கரைந்து போவதும்
கனவோடு நினைவுகளின்
எண்ணங்களில்
களித்துப் போவதும்
வாழ்க்கையென்றானது
இங்கு எனக்கு
உன் மீது உள்ள நேசம்
உயிரோடு எந்நாளும்
சுவாசமென்றானது
உன்னை எண்ணுவதே வாழ்வின்
இன்பமென்றானது
என் பேரழகனே
கவிஞர் மேகலைமணியன்