



சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், வில்வித்தை பயிற்சியாளருமான கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60.
மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி. இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந் ரஜினிகாந்த் நடித்த ‘வேலைக்காரன்’, விஜய் நடித்த ‘பத்ரி’ உள்பட பல படங்களில் அவர், நடித்துள்ளார். தமிழகத்தில் நவீன வில்வித்தை முன்னோடியான ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 22 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று நள்ளிரவு 1:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். அவரது உடலை தானம் செய்வதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார். ஷிஹான் ஹுசைனி.
உடல் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு கராத்தே மற்றும் வில்வித்தை விளையாட்டு வீரர்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

