கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் பெற்றோர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர்.
மாணவியின் தாயார் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசி வருகின்றனர். மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளனர். ஏற்கனவே மாணவியின் தாய் செல்வியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறியிருந்தார். மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார். கடந்த மாதம் 13-ஆம் தேதி கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் அடைந்தார். மாணவி 3-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றசாட்டி வந்தனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் முதலமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கவுள்ளனர்.